நம்பினால் நம்புங்கள்




*நட்சத்திர மீன்களின் வெட்டுப்பட்ட கால் பகுதிகள் மீண்டும் வளரும்.

*மெகலோடன் என்ற சுறா மிகப் பிரமாண்டமானது. ஒரு பஸ்ஸை விடவும் பெரியது. அது கடித்தாலோ 10.8 முதல் 18.2 டன் ஆற்றல் இருக்குமாம். திமிங்கிலத்தின் மண்டையோட்டைக் கூட திராட்சையை நசுக்குவது போல நசுக்கும் வல்லமை பெற்றது. நல்லவேளையாக இச்சுறா இப்போது இல்லை!

*குளிர்ச்சியான அறையில் உறக்கம் விரைவாக வரும்.

*ப்ளூ டூத்... இந்தப் பெயர் பழங்கால டென்மார்க் மன்னர் ஹாரால்ட் ப்ளூ டூத் என்பவரிடம் இருந்தே வைக்கப்பட்டிருக்கிறது. மன்னர் எதிர் எதிரான பழங்குடிகளை ஒன்றிணைத்தவர். இன்றைய ப்ளூடூத் எதிர் எதிர் கருவிகளை ஒன்றிணைக்கிறதே!

*சூரியனின் ஒரிஜினல் நிறம் வெண்மைதான். விண்வெளி யில் இருந்து பார்க்கையில் அப்படித்தான் புலப்படுகிறது. இன்னும் வெகுதொலைவில் இருந்து பார்க்கையில், வளிமண்டலம் காரணமாக மஞ்சளாகத் தோன்றுகிறது.

*பிரேசிலில் உள்ள ஒரு சிறையில் நிலையான சைக்கிள்களை இயக்கி, அருகிலுள்ள நகரத்துக்கு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்கள். இச்செயல்   பாட்டில் பங்குபெறும் கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பு உண்டு!

*பூனைகள் ஏதேனும் ஒரு பொருளில் முகத்தை உரசினால், அதை தன் எல்லைக்குள் கொண்டு வருகிறது என அர்த்தம். உங்கள் முகத்தில் தேய்த்தாலோ, நீங்கள் அதன் குடும்பத்தில் ஒருவர் என்றே அர்த்தம்!

*2012ல், வெஸ்லி ஹாரிங்டன் என்ற பிரிட்டிஷ்காரர் மெட்டல் டிடெக்டரை பயன்படுத்தி, இருபதே நிமிடங்களில் ஒரு புதையலைக் கண்டுபிடித்தார். ஒரு லட்சம் பவுண்டு மதிப்புள்ள ரோமானிய தங்க நாணயங்கள்!

*மென்மையான மேல் ஓடு கொண்ட ஆமை வகை சீனாவில் உள்ளது.

*கிறிஸ்துமஸ் மரங்களுக்காக மரம் வெட்டுவதைத் தவிர்த்து, மரம் வளர்ப்போம் என்ற பிரசாரம் இப்போது மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி வருகிறது.