அசுர மீன்!



பூமியின் நிலப்பரப்பை டைனோசர்கள் ஆட்சி செய்த காலத்தில் கடலில் வாழ்ந்த அசுர மீன் ஒன்றின் பாறைப் படிமம் ஸ்காட்லாந்தில் கிடைத்தது. அதிலிருந்து உருவாக்கப்பட்ட மாதிரி இது. டால்பின் போல இருக்கும் இந்த மீன் 17 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது.

14 அடி நீளத்துக்கு வளர்ந்திருந்த இவை, திமிங்கலத்தை விட மட்டுமே சிறியவை. குட்டி மீன்களைத் தின்று உயிர் வாழ்ந்த இவை, படுவேகத்தில் நீந்தும் வல்லமை பெற்றிருந்தனவாம்!