நம்பினால் நம்புங்கள்



*கனடாவில் உள்ள ஒன்டாரியோவில் மனித உடல் போலவே கட்டப்பட்ட ஒரு மருத்துவமனை உள்ளது.

*ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் சவரமே செய்யப் போவதில்லை என முடிவெடுத் தார் வேலன்டைன் டேப்லே என்ற   அமெரிக்க அரசியல்வாதி. லிங்கன் வெற்றி பெற்ற 1860ம் ஆண்டு முதல், 50 ஆண்டுகள் சவரம் செய்து கொள்ளாமலே 1910ல் இறந்து போனார். அப்போது அவரது தாடியின் நீளம் 12 அடி 6 அங்குலம்!

*குகையிலிருந்து வெளிப்படும் வௌவால்கள் எப்போதும் இடது பக்கமே திரும்பும்.

*2013ல் நெதர்லாந்தில் 19 சிறைச்சாலைகள் மூடப்பட்டன. கிரிமினல்களின் எண்ணிக்கை குறைந்து போனதே காரணம்!

*80 சதவீத அமெரிக்கர்கள் வாழ்வில் ஒருமுறையாவது ஏதேனும் ஒரு வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்.

*காற்றாலைகள் பொதுவாக எதிர் கடிகாரச் சுற்று முறை யிலேயே வடிவமைக்கப்படுகின்றன. அயர்லாந்தில் மட்டும் அப்படி அல்ல!

*நாய்க்குட்டி பிறக்கும்போது பார்வையற்று, கேட்கும் திறனற்று, பற்களும் இல்லாமலே இருக்கும்.

*வால்ட் டிஸ்னி பள்ளியில் படிக்கும்போது இடை நின்றவர். ஒரு பத்திரிகை அலுவலகத்தில், ‘கற்பனைத்திறனும் ஐடியாக்களும் இல்லை’ எனக் கூறி வேலையை விட்டு நிறுத்தப்பட்டவர்.

*காற்றைக் காட்டிலும், எஃகினுள் ஒலி 15 மடங்கு விரைவாகச் செல்லும்.

*இடதை விடவும், வலது நுரையீரலே அதிக காற்றை இழுத்துக் கொள்கிறது.