பிரமாண்ட பூச்சி!



48 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு பிரமாண்ட பூச்சி இனத்தின் பாறைப் படிமத்தை மொராக்கோ நாட்டில் கண்டறிந்திருக்கிறார்கள். பாசிகளிடையே வாழ்ந்த இது நண்டு போன்ற ஒரு இனத்தின் மூதாதையர் என்கிறார்கள். அகிரோகாசிஸ் பென்மௌலே என பெயரிடப்பட்டுள்ள இது சுமார் 7 அடி நீளம் வரை வளரக் கூடியது.