நம்பினால் நம்புங்கள்




*அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ‘டைனோசர்’ என்ற பெயர் சூட்டப்பட்ட சிறிய ஊர் உள்ளது. அங்குள்ள தெருக்களுக்கும் டைனோக்களின் பெயர்களே!

*பண்டைய வீரர்களான கிளாடியேட்டர்களில் பலர் சைவ உணவே உட்கொண்டனர். தானியங்கள், பீன்ஸ், உலர்பழங்கள் போன்றவையே அவர்களின் பிரதான உணவு.

*1964ல், ஓர் ஆஸ்திரேலியர் லண்டனில் இருந்து பெர்த் வரை தன்னைத் தானே ஏர் பார்சலில் அனுப்பிக் கொண்டார். நல்லவேளையாக 3 நாட்களில் பத்திரமாக போய்ச் சேர்ந்தது!

*இதுவரை பதிவானவற்றிலேயே மிக அதிக உயரம் எட்டிய அலை 1958ல் உருவானது. ‘லிதுவா பே மெகா சுனாமி’ என்ற பெயர் கொண்ட இந்த அலை, அலாஸ்காவில் எழுந்தது. மொத்த உயரம் 1,720 அடி!

*உக்ரைனில் போர்னோ படங்கள் பார்ப்பதற்கு மருத்துவச் சான்றிதழ் தேவை!

*லாரி வால்டர்ஸ் என்பவர் ஒரு நாற்காலியில் 45 பலூன்களைப் பொருத்தி, 15 ஆயிரம் அடி வரை உயரச் செய்தார்!

*கூகுள் நிறுவனத்தில் புதிதாக பணிக்குச் சேர்பவர்கள் ‘நூக்லர்ஸ்’ என்று அழைக்கப்படுகின்றனர். வேலைக்குச் சேர்ந்த பிறகு வரும் முதல் வெள்ளிக்கிழமை அன்று அணிவதற்காக அவர்களுக்கு சிறப்பித் தொப்பி அளிக்கப்படுகிறது!

*சாதாரண மீன்களுக்கு இடையே விடப்பட்ட ஒரு ரோபோ மீனை, மற்ற மீன்களும் ஏற்றுக்கொண்டு விட்டன. ஒரு கட்டத்தில் மற்ற மீன்களின் தலைவனாகவே ரோபோ மீன் மாறிவிட்டது. இது சமீபத்திய ஆராய்ச்சி!

*நியூசிலாந்தின் டியூன்டின் நகரிலுள்ள பால்ட்வின் என்ற தெருவே உலகின் மிகச்சரிவான தெருவாகும். 35 சதவீத சாய்வு விகிதத்தில் அமைந்துள்ள இத்தெருவில் வாகனம் ஓட்டுபவர்கள் திறமைசாலிகளே!

*பின்லாந்தில் தனிநபர் வருமான அடிப்படையிலேயே அபராதங்கள் விதிக்கப்படுகின்றன. 2002ல், அதிவேகத்தில் கார் ஓட்டிய குற்றத்துக்காக நோக்கியா அதிகாரி ஒருவருக்கு 1 லட்சத்து 3 ஆயிரம் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.