துளிகள்




*முட்டைக்குள் இருக்கும் குஞ்சுக்கு ஒலியை உணரும் சக்தி உண்டு.

*செல்போன்களிலிருந்து வெளியாகும் நுண்ணலைகளில் 80 சதவீதம் நம் தலைக்குள் கிரகிக்கப்படுகிறது.

*கணிதத்தில் பயன்படுத்தப்படும் கிராஃப் முறையை அறிமுகம் செய்தவர் ‘ரெனி டெகார்டீஸ்’.

*பின்னோக்கிப் பறக்கும் பறவை ஹம்மிங் பறவை.

*உலகிலேயே அதிகம் சிலை வைக்கப்பட்டுள்ளது யாருக்குத் தெரியுமா? ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் லெனினுக்குத்தான்.

*உலகில் அதிக அளவு கார் திருட்டுப்போகும் இடம், அமெரிக்காவின் சிகாகோ.

*தவளை ஒருமுறையில் அதிகபட்சமாக நான்காயிரம் வரை முட்டைகள் இடும்.

*கருவில் முதன்முதலாக உருவாகும் உறுப்பு கண்தான்.

அரசும் தனியார் துறையும் பேருந்து போக்குவரத்தை இயக்குகின்றன. இவை தவிர குறிப்பிட்ட ஊர்களை அடையும் பேருந்துகளுக்கு ‘ஆம்னி பஸ்’ என்று பெயர். ‘ஆம்னஸ்’ என்னும் பிரெஞ்சு சொல்லிலிருந்து ஆம்னி பஸ் உருவானது.

ஆம்னஸ் என்றால் எல்லோருக்கும் பயன்படக்கூடியது என்பது பொருள். குதிரையால் இழுத்துச் செல்லப்படும். பொதுமக்களுக்கான பேருந்து ஒன்று 1843ம் ஆண்டு பிரான்சில் விடப்பட்டது. இது பொதுவான பஸ் என்பதால் ஆம்னி பஸ் என்று அதற்கு பெயரிடப்பட்டது.

 பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.