ரோபோ ரகசியங்கள்!



‘ரோபோ, மனித அறிவியல் அறிவின் உச்சம். கடவுளின் காரியத்தைக் கையில் எடுக்க எத்தனிக்கும் முயற்சி’ என்று சொல்லப்பட்டாலும் தீவிர தேடலின் விளைவாக விளைந்த ரோபோ பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம் மிகுந்துவை. இதுவரையான ரோபோக்களின் டேட்டா இதோ...

எந்திர மனிதனைக் குறிக்கும் ரோபோ (Robot) என்ற ஆங்கிலச் சொல், ‘அடிமை’ என்று பொருள்படும் ‘செக்’ மொழி வார்த்தையிலிருந்து பிறந்தது. காரல் கெப்பேக் என்பவர் செக் மொழி நாடகாசிரியர், நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். இவர் 1921ல் R.U.R. (Rossum’s Universal Robots) என்ற நாடகத்தில் ‘ரோபோ’ என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தினார்.

மனிதர்களால் காலங்காலமாகச் செய்யப்படும் கடின வேலைகளைச் செய்வதற்காக குறிப்பிட்ட சில எந்திரங்களை பயன்படுத்துதல் எந்திர மனித இயல் (Robotics) என அழைக்கப்படுகிறது. ஐசக் அசிமோவ் என்ற ரஷ்யாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானக் கதைகளின் நூலாசிரியர், எந்திர மனித இயல் என்ற சொல்லை முதன்முதலில் 1940களில் பயன்படுத்தினார். அசிமோவ் 300க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

பண்டைக் காலத்தில் சீனா, கிரீஸ், எகிப்து ஆகிய நாடுகளில் மனித உருவிலும், மிருகங்கள் மற்றும் பறவை வடிவிலும், இயந்திரவியல் கோட்பாட்டின் அடிப்படையில் இயங்கும் எந்திர பொம்மைகள் இருந்தன. கிரேக்க நெருப்புக் கடவுள் ஹெபாய்ட்டஸ் தனக்கு உதவி செய்ய ரோபோ போன்ற உருவங்களை உருவாக்கியதாக கிரேக்க புராணங்கள் சொல்கின்றன.

 இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி 1495ல் ஒரு ரோபோவைக் கண்டுபிடித்தார்.1928ல் ERIC என்ற ரோபோவை டபிள்யூ எச்.ரிச்சர்ட்ஸ் என்பவர் லண்டனில் சொசைட்டி ஆப் மாடல் எஞ்சினியர்ஸில் முதன்முதலில் காட்சிக்கு வைத்தார்.1939 மற்றும் 1940ல் நடந்த உலகக் கண்காட்சிகளில் வெஸ்டிங்ஹவுஸ் எலெக்ட்ரிக் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் Electro என்ற ரோபோவைக் காட்சிக்கு வைத்தது.1940களில் William Grey Walter என்பவர் Elmer, Elsie ஆகிய ரோபோக்களை வடிவமைத்தார்.

1954ல் George Devol என்பவர் Unimate என்ற ஒரு இயந்திரக் கையைக் கண்டுபிடித்தார். இந்த ரோபோ 1961ல் அமெரிக்கக் கார் தொழிற்சாலை ஒன்றில் பயன்பாட்டுக்கு வந்தது.1960களில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் பரவியது.

1973ல் ேடாக்கியோவில் உள்ள Waseda பல்கலைக்கழகம் Wabot-1 என்ற முழுமையான ரோபோவை உருவாக்கியது. இந்த ரோபோ இரண்டடி தூரம் நடக்கும் ஆற்றலையும் ஜப்பானிய மொழியில் ஒருவரிடம் பேசக்கூடிய திறனையும் பெற்றிருந்தது.

ேஹாண்டா நிறுவனம் தயாரித்த Asimo என்ற ரோபோ பொதுமக்களை பெரிதும் கவர்ந்தது.நகராதவை, நகரக்கூடியவை என ரோபோக்களில் இருவகை உண்டு. ரோபோவில் Controller, ARM, Drive, End Effector மற்றும் Sensor என ஐந்து முக்கிய பாகங்கள் உண்டு. ஒவ்வொரு ரோபோவிலும் கணினி ஒன்று இணைக்கப்பட்டிருக்கும்.ரோபோக்களை உருவாக்குவதில் ஜப்பானியர்கள் முதலிடத்தை வகிக்கின்றனர். அவர்கள் இத்துறையில் அமெரிக்கர்களை பின்னுக்குத் தள்ளி முன்னேறிவிட்டனர். உலகிலுள்ள பத்து லட்சம் தொழிற்சாலை ரோபோக்களில் பாதியளவு ஜப்பானில்தான் உள்ளன.

ஒரு ஆகாய விமானத்தை சுத்தம் செய்ய 12 மணி நேரம் தேவைப்படும். Sky Wash என்ற ரோபோ இப்பணியை மூன்று மணி நேரத்தில் முடித்துவிடும்.ஜப்பானில் நடனமாடும் ரோபோக்கள் உண்டு. ரோபோவின் நினைவில் பதிவு செய்யப்பட்டுள்ள பதிவுகளின்படி இது நடனமாடும். பதிவு செய்யப்படாத புதிய அசைவுகளோடு இதற்கு நடனமாடத் ெதரியாது.

உலகில் ரோபோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் உள்ள ரோபோக்களில் 40 சதவீதம் ஜப்பானில்தான் உள்ளன. மொத்த ரோபோக்களில் பாதியளவு எண்ணிக்கை ஆசியாவில் உள்ளன. 32 சதவீதம் ஐரோப்பாவிலும், 16 சதவீதம் வட அமெரிக்காவிலும், 1 சதவீதம் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்ரிக்காவிலும் உள்ளன.

இன்று ரோபோ தயாரிப்புத் தொழில் பெரும் அளவில் வளர்ந்துள்ளது. 2014ல் உலகெங்கிலும் இரண்டு லட்சம் தொழிலக ரோபோக்கள் விற்பனையாகியுள்ளன. 2017 இறுதியில் உலகில் 20 லட்சம் ரோபோக்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.சிறிது காலத்திற்கு முன்பு ஃபுளோரிடா இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியின் டிஸ்கவரி லேப் உருவாக்கிய ரோபோ படைகள் தெருக்களில் ரோந்து சுற்றும் பணியிலும், வாகனங்களை நிறுத்த அனுமதிச் சீட்டுகள் வழங்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தன.

அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட ரோபோக்களில் Robodoc என்பதும் ஒன்று. இது இடுப்பு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தது. Helpmate என்ற ரோபோ மருத்துவமனைகளில் உதவியாளராகப் பணிபுரிய வடிவமைக்கப்பட்டது. இது நோயாளிகளுக்கு உணவை வழங்குதல், ஆவணங்கள் மற்றும் மாதிரிகளை மருத்துவமனையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குக் கொண்டு செல்லுதல் போன்ற வேலைகளை மேற்கொள்ளும்.

(தொடர்ச்சி - அடுத்த வாரம்...)
- க.ரவீந்திரன், ஈரோடு.