பிட்ஸ் கார்னர்!




*இங்கிலாந்தில் இயக்கப்படும் பயோ பஸ்ஸின் எரிபொருள், வெறும் மனிதக்கழிவு மட்டுமே.

*சான்ஃபிரான்சிஸ்கோவிலுள்ள கோல்டன் கேட் பிரிட்ஜ் தற்கொலைக்கு புகழ்பெற்றது. எக்கச்சக்க தற்கொலைகள் நிகழ்ந்து எண்ணிக்கை
எகிறியவதால், 997 மரணங்களோடு அரசு தன் கணக்கை நிறுத்திக்கொண்டு விட்டது.

*உலகில் நாக்கினால் ஒருவர் தூக்கியுள்ள அதிகபட்ச எடை 12.5 கிலோ. இச்சாதனையைச் செய்தவர் தாமஸ் ப்ளாக்தோர்ன்.

*உலகில் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஏதோ ஒரு மூலையில் வேற்றுலக ஜீவராசிகளைப் பார்த்ததாக மக்கள் கூறுகின்றனர்.

*ஜெர்மனி மருத்துவமனைகளின் வெளியே அல்சீமர்ஸ் நோயாளிகளுக்கென போலி பஸ் ஸ்டாப்கள் உண்டு.