பாரீஸ் ஒப்பந்தம் இனி என்ன ஆகும்?



உலகில் பெருமளவு கார்பன் வெளியிடும் வல்லரசு தேசமான அமெரிக்கா, பாரீஸ் சூழல் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்துவிட்டது. அதிபர் ட்ரம்ப் இதனை அமெரிக்காவின் ரோஸ் கார்டனிலுள்ள வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இது வேலைக்காகாதுஎன பிடிவாதமாக பேசிவிட்டு கிளம்பி விட்டார்.  இதனால்  உலகில் என்னென்ன மாற்றங்கள் உருவாகும்? 

எந்த வாக்குறுதிகளும்  இனியில்லை! 

பாரீஸ் ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகள் 2100 ஆம் ஆண்டுக்குள் தாங்களாக ஒரு இலக்கு நிர்ணயித்து உலகில் அதிகரித்துள்ள 2 டிகிரி செல்சியஸ்  வெப்பத்தை  குறைக்கவேண்டும் என்பதுதான் லட்சியம்.ஒபாமா ஆட்சியில் பசுமை இல்ல வாயுவின் அளவை (2005 இல் 28%) வாகனங்களின் பெருக்கத்தை குறைத்து, கார்பனின் அளவை 2025க்குள் 26% கொண்டு வருவதுதான் திட்டம். ஆனால் இது இன்னும் அமலுக்கு வரவேயில்லை.

இந் நிலையில் ட்ரம்பின் வெளியேற்ற அறிவிப்பு,சிரியா, நிகரகுவா உள்ளிட்ட பாரீஸ் ஒப்பந்தங்களுக்கு  உட்படாத  நாடுகளுடன்  அமெரிக்காவை    இணைய   வைத்துவிட்டது. “பாரீஸ் ஒப்பந்தத் திலுள்ள 126 நாடுகள் பசுமை இல்ல வாயு வெளியீட்டிற்கு 97% காரணம். இதில் அமெரிக்காவின் பங்கு 14% தானே!” என்கிறார் ஹார்வர்டு சூழல் பொருளாதாரத் துறையின்  இயக்கு நரான ராபர்ட் ஸ்டாவின்ஸ்.

பேச்சுவார்த்தைக்குவாய்ப்பில்லை! பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து  அமெரிக்கா விலகுகிறது என்றால் உடனே  பயந்துவிட  வேண்டாம்.
2020 ஆம் ஆண்டுவரை  பேச்சுவார்த்தைக்கான  வழிகள்  திறந்தேயுள்ளன. “பாரீஸ் ஒப்பந்தம் என்பது  ஒரு  கொள்கையை  மட்டுமே லட்சியமாகக் கொண்டதல்ல. மேலும் அதன் விதிகள் 5 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கபடுபவை”என்கிறார் ஸ்டான்ஃபோர்டு பல்கலையின்  சட்டத்துறையைச் சேர்ந்த பேராசிரியர் மைக்கேல் வாரா.  பொருளாதார தடுமாற்றம்!

கரிம எரிபொருட்களை 
குறைத்து மாற்று ஆற்றல் மூலங்களை பயன்படுத்துவது இந்தியாவின் வாக்குறுதி. 2022 ஆம் ஆண்டுக்குள் தன்  கரிம எரிபொருட்களின்  பயன்பாட்டைக் குறைத்து மாற்று  ஆற்றல் மூலங்
களை 40% ஆக உயர்த்துவது குறிக்கோள். உலகின் மிகப்பெரிய  கார்பன்  உற்பத்தி  நாடான அமெரிக்கா வெளியுள்ளது
வளரும்  நாடுகளுக்கு  அதிர்ச்சி தரக்கூடும். மாற்று  மூலங்களை  தேடி  அமல்படுத்துவது  இனிவரும்  காலத்தில் பல்வேறு நாடுகளுக்கும் கடும் பொருளாதாரச் சுமைதான்.  
 
புதிய கண்டுபிடிப்புகள் உருவாகாது!

பாரீஸ் ஒப்பந்த அழுத்தம் பல்வேறு  நாடுகளை கரிம எரிபொருட்களிலிருந்து மெல்ல விலக்கி மாசு வெளியிடாத  வாகனங்கள் உள்ளிட்ட கண்டுபிடிப்பு களுக்கு மறைமுகமாக  உதவியது. ஆனால் இனி அதுபோன்ற கண்டு பிடிப்புகளுக்கான  தூண்டுதல்கள் அமெரிக்காவுக்கு கிடைக்காது. “பசுமை  திட்டங்களின் தூண்டுதல் இல்லாவிட்டாலும் அமெரிக்கா கார்பன் அல்லாத பொருட்களை உருவாக்கும்” என தெம்பூட்டுகிறார் மைக்கேல் வாரா. 

நம்பிக்கை இழப்பு!

உலகளவிலான  நாடுகள் இணைந்துள்ள ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்குவது, அமெரிக்க அரசுக்கு பெரும் நம்பிக்கை  இழப்பு. வடகொரியா, சிரியா பிரச்னையில்  அமெரிக்காவின நிலைப்பாடு இனி கேள்விக்குறியாகலாம். மற்றொரு வகையில் அமெரிக்கா ட்ரம்ப்  அதிபராக  பதவியேற்றதிலிருந்து கூட்டுறவுத் திட்டங்களை தொடர்ந்து கைவிட்டு வரு கிறது. எ.கா. பசிபிக் ஒப்பந்தம். “பல்வேறு  கூட்டுறவுகளைக்  கைவிடுவதன் வழியாக   மெல்ல    சீனாவை  பல்வேறு நாடுகளின் தலைவராக மாற்ற  அமெரிக்காவே சம்மதிப்பது  போன்ற சூழ்நிலை உருவாகி விட்டது” என சூழலை விவரிக்கிறார்  பேராசிரியர் மைக்கேல் வாரா.