‘Gay’ பிரதமர் வரத்கர்!



அயர்லாந்தின் புத்தம் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மருத்துவர் லியோ வரத்கர் இந்திய வம்சாவளி சொத்து. இவரின் குடும்ப பூர்வீகம், குஜராத்திலுள்ள வரத் கிராமம். 2015 ஆம் ஆண்டே தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவித்துவிட்ட வரத்கரின் தைரியம் அசாதாரணம். 

தன்னுடைய 22 வயதில் அயர்லாந்தின் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த வரத்கர், 27 வயதில் நாடாளுமன்றத்தில்  நுழைந்துவிட்டார். தன் பாலினச் சேர்க்கையை பகிரங்கப்படுத்தியது  36  ஆம்  வயதில்.  இதோ தன் 38 ஆம் வயதில் அயர்லாந்தின் அரியணையிலும் துண்டு போட்டு பிரதமராகி விட்டார் லியோ வரத்கர்.

1993 ஆம் ஆண்டு ஓரினச்சேர்க்கை குற்றமில்லை என அயர்லாந்து அறிவித்ததோடு விவாகரத்து சட்டத்தையும் வரைவு செய்தது. 2015 ஆம் ஆண்டு  ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தையும் அங்கீகரித்த முதல் நாடு அயர்லாந்துதான். லியோ வரத்கரைப் போலவே ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராகியுள்ள நாடுகள் மொத்தம் 3 உள்ளன.

அவர்கள்-லக்‌ஷம்பர்க் நாட்டின் பிரதமர் எக்ஸேவியர் பெட்டல், பெல்ஜியம் நாட்டின் முன்னாள் பிரதமர் எலியோ டி ரூபோ, அயர்லாந்து நாட்டின் முன்னாள் அதிபர் ஜோகன்னா சுகுரோர்டாட்டிர்.