வைட்டமின் சி விளைவுகள்



உடல் மொழி ரகசியங்கள் 42

டாக்டர் ஸ்டீபென்  கலிபோர்னியா பல்கலைக்கழகம்ப் பேராசிரியர் சிறைச்சாலையில் நடத்திய ஆராய்ச்சிகளில்பதின் பருவ குற்றவாளிகள், கூட்டு உயிர்ச்சத்துகளை தொடர்ந்து துணை உணவாக  சாப்பிடுவதால்  அவர்களின் வன்முறை  செயல்பாடுகள் குறைவதாகக் கண்டுபிடித்துள்ளார்.  இந்த  ஊட்டச்சத்துகள் மூளை  செல்கள்  இடைவெளிகள்  இணைப்பை  மேம்படுத்துவதால் இத்தகைய முன்னேற்றம் என்று குறிப்பிடுகிறார்.

இனோசிடோல் (Inositol)

நாம்  கடும் மன அழுத்தத்துக்கு  உட்படும்போது  B-வைட்டமின் வகை ‘இனோசிடோல்’ மனத் தளர்ச்சி, அச்சம் மற்றும் உடல் பருமன் ஆகிய சீர்கேடுகளைக் குறைக்கிறது.இஸ்ரேல் பார்சிலி மருத்துவ நிலையத்தில் - டாக்டர் ஜோனாதன் பெஞ்சமின் நடத்திய ஆராய்ச்சிகளில் பேரச்சத்துக்கு ஆளாகும் 21-நோயாளிகளை இனோசிடோல் மற்றும் மனத் தளர்ச்சி நோய் மருந்துகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார்.

நோயாளிகளுக்கு தினசரி, 12 முதல் 18 கிராம் ‘இனோசிடோல்’தொடர்ந்து கொடுத்து ஆராய்ந்தார். ஒரு மாதம் முடிந்ததும் நோயாளிகளுக்கு ஒரு சில தடவைதான் பேரச்சம் தாக்கியது.மருந்துகளோடு ஒப்பிடும்போது ‘இனோசிடோல்’ பக்கவிளைவுகள் மிகக்குறைவு  என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளிகளுக்கு தினசரி 2 முதல் 5 கிராம் இனோசிடோல், வைட்டமின் பி சேர்த்து கொடுப்பதால் கூடுதல் பயன் உண்டாவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

வைட்டமின் சி

வைட்டமின் சி உடல்நலத்துக்கு இன்றியமையா ஊட்டச்சத்து. C-உயிர்ச்சத்து பற்றாக்குறையால் உடல் சோர்வு மற்றும் மன எரிச்சல் ஆகிய தொடக்க நிலை அறிகுறிகள் வெளிப்படும். மூளை செல்களில் வைட்டமின் சி அதிகம். கெடெகோலமின்ஸ் (Catecholamines) எனும் வேதியத்தை வைட்டமின் சி சீராக்குவதால், மனஅழுத்தம் குறைகிறது. நியூரோடிரான்மிட்டர் வேதியங்களின் செயல்பாடுகள் மேம்படுகின்றன.

அண்மையில் டாக்டர் ஸ்டர்ட் புரூடிடையர் பல்கலைக்கழகம், ஜெர்மனி. நடத்திய ஆராய்ச்சிகளில் தினசரி  3000 மி.கி. அளவில் தொடர்ந்து துணை உணவாக சாப்பிடுவதால் மனநிலை மேம்படுவதாகவும், ஆண்மை சீரடைவதாகவும் கண்டுபிடித்துள்ளார். உடல்நலத்துக்கு தினசரி 1000- 3000 மி.கி.இரண்டு வேளையாக பிரித்து சாப்பிடலாம்  என்றும் பரிந்துரைக்கிறார்.

காபா (GABA) : ‘காபா’ ஓர் அமினோ அமிலம் (Amino Butyric Acid).
இது மூளையில் நியூரோடிரான்ஸ்மிட்டர் வேதியமாகச் செயல்படுகிறது.  ஊட்டச் சத்தின்  அருமை  உணர்ந்து அதை  மதிக்கும்  மனநோய்  மருத்துவர்கள் - மனப்பதற்றம் (Anxiety) முதலிய மனச்சீர்கேடு உள்ள மனநோயாளிகளுக்கு ‘காபா’ துணை உணவு கொடுத்து நோயைக் குணப்படுத்துகிறார்கள்.

உடா  பல்கலைக்கழக மருத்துவத்துறை விஞ்ஞானிகள் நடத்திய  ஆராய்ச்சிகளில்  மூளையில் ‘எண்ணம்’ உருவாகும் பகுதியில் ஏற்படும் சீர்கேடுகளைக் களைந்து, எண்ணும் திறன் மேம்படுவதாகக் கண்டுபிடித்துள்ளனர். தினசரி 500-1000 மி.கி.  அளவில் ‘காபா’ துணை உணவு சாப்பிடுவதால்  மனநலம்
சீராகப் பாதுகாக்கப்படும்.

(ரகசியம் அறிவோம்)

ச.சிவ வல்லாளன்