புத்தகம் புதுசு!




DNA
The Story of the Genetic 
Revolution by
James D. Watson with Andrew
Berry & Kevin Davies
512pp  Rs. 1,406
Knopf  

கடந்த பத்தாண்டுகளில் மரபணுரீதியாக என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன எனும் வரலாற்றை விவரிக்கும் நூல் இது. நோபல் பரிசு வென்ற ஜேம்ஸ் டி வாட்ஸன் டிஎன்ஏ வடிவமைப்பின் மர்மங்களை ஆதாரபூர்வ  விளக்கங்களின் மூலம் விவரிக்கிறார்.

மரபணு எடிட்டிங், புற்றுநோய் ஆராய்ச்சி, விவசாயத்திற்கான வேதிப்பொருட்கள், தன்னியல்பு மரபணுமாற்றம் ஆகியவற்றைக் குறித்த பிராக்டிகலான விளக்கங்கள் இந்நூலின் சிறப்பு. மரபணு குறித்து நடைமுறை வழியில் முழுமையாக அறிய சிறந்த வழிகாட்டி
இந்நூல்.
  
An Inconvenient Sequel:
Truth to Power:
Your Action Handbook to Learn the Science, Find Your Voice, and Help Solve the Climate Crisis
Al Gore 320pp
Rs. 1,662
Rodale

அமெரிக்க முன்னாள் துணை அதிபரான அல்கோர், உலக வெப்பமயமாதலைப் பற்றி 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன், முன்னணி ஆராய்ச்சியாளர்களின் தகவல்களோடு பதிப்பித்துள்ள முக்கியமான ஆராய்ச்சி நூல் இது.

வெள்ளம், ஜிகா வைரஸ் பிரச்னைகளை சூழல் பிரச்னைகளோடு லிங்க் செய்வது புதியபாதையைக் காட்டுகிறது. அடுத்த தலைமுறை யிடம் சூழல் குறித்து உரையாடவும் ஊக்கப்படுத்தும் நூலில் சீரியஸ், காமெடி இரண்டுமே உண்டு. நாம் செய்யவேண்டிய சூழல் செயல்பாடுகளுக்கு ஊக்கம் கொடுக்கும், செயல்படத்தூண்டும் பசுமை நூல் இது.