ஹார்வி தாண்டவம்!



அமெரிக்காவைத் தாக்கிய ஹார்வி புயல், டெக்ஸாஸ் மாநிலத்தில் 9 ட்ரில்லியன் காலன் நீரை மழையாகக் கொட்டியுள்ளது. மெக்சிகோ வளைகுடாவில் சாதாரணமாக எதிர்கொள்ளப்பட்ட ஹார்வி புயல் தொடங்கிய சில மணிநேரங்களிலேயே முந்தைய புயல் ரெக்கார்டுகளை முறியடித்தது.

“சூழல்மாற்றத்தால் இயற்கையாகக் தோன்றும் புயல்களின் அளவு இனி அதிகரிக்கலாம்” என்கிறார் டெக்சாஸ் டெக் பல்கலைக்கழகத்தின் பருவநிலை ஆய்வாளரும், பேராசிரியருமான கேத்தரின் கேஹோ. புயலுக்கு நீர் ஆவியாதல் அவசியத்தேவை. மெக்சிகோ வளைகுடாவில்  2.7-7.2 ஆக புயலுக்கு ஒருவாரம் முன்பு வெப்பநிலை நிலவியிருந்தது.

கடலின் மேல் மட்ட வெப்பம் 1 டிகிரி உயர்ந்ததால்  ஈரப் பதத்தின் அளவு 5% அதிகரித்துள்ளது. கடல்நீர் மட்டமும் 2100 ஆம் ஆண்டுக்குள் 2.4 மீ உயரும் என NOAA நிறுவனத்தின் ஆய்வு எச்சரிக்கிறது.

“பொதுவாக மழைமேகங்களை காற்று கடல்புறமாக ஒக்லஹோமாவுக்கு வடக்கே  தள்ளிச்செல்லும். ஆனால் இந்தமுறை அவ்வாறு நடக்கவில்லை” என வியக்கிறார் கடல்சூழல் ஆராய்ச்சியாளர் இம்மானுவேல். எதிர்கால புயல்களைப் பற்றி ஆராய ஹார்வி ஆராய்ச்சி உதவக்கூடும்.