ஃப்யூச்சர் சோலார் பேனல்!



சோலார் பேனல்கள் சூழல் காக்கும் என்றாலும் பெத்த சைஸில் வீட்டு ஓட்டின் மேல் இருப்பதைப் பார்ப்பது கொஞ்சம் விநோத அனுபவம்தான். தற்போது அதற்கு  புதிய தீர்வாக கண்ணாடி டிசைனில் சோலார் பேனல் உருவாக்கப்பட்டுள்ளது.“ட்ரான்ஸ்பரன்டான சோலார் செல்கள்தான் நம் நாளைய எதிர்காலம். ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், கட்டிடங்கள் உள்ளிட்டவற்றின் தரத்தையும் உயர்த்துவதோடு, ஆற்றல் தேவையையும் பூர்த்தி செய்யும்” என குதூகலிக்கிறார் மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான ரிச்சர்ட் லன்ட். 57 பில்லியன் சதுர மீட்டர் அளவில்  சோலார் பேனல்களை அமைத்தால் 40%  அமெரிக்க  மின் தேவையை தீர்க்கமுடியும் என்கிறார்கள்.5ஆண்டுகால சோலார் ஆராய்ச்சியில் தற்போது 1% சோலார் மின்சார உற்பத்தியளவை அதிகரிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.