ஹைட்ரஜன் சேமிக்கும் சிகரெட்!



சிகரெட் குப்பைகள், சூழலுக்கு கேடு  விளைவிக்கின்றன என்றாலும் அவை ஹைட்ரஜன் சேமிக்கும் பொருட் களாக பயன்படும் என கேரண்டி  தருகின்றனர் நாட்டிங்காம் பல் கலைக்கழக  ஆராய்ச்சியாளர்கள்.

சிகரெட்டின் பஞ்சுப்பகுதி, கார்பன் மற்றும் ஹைட்ரஜனை சேமிக்கும் திறன் கொண்டது. “சிகரெட்டின் பஞ்சுப்பகுதியை வீண் என்றே நினைப்போம். ஆனால் அவற்றில் குறைவான கார்பன் வெளியீடு கொண்ட ஹைட்ரஜனை சேகரிக்க   முடியும்   மற்றும்  மாசுபாடுகளைக் குறைக்கும்  என்பது  புதிய கண்டுபிடிப்பு தானே! “என தீர்க்கமாக பேசு கிறார் பேராசிரியர் மொகாயா.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு 6 ட்ரில்லியன் டன்கள் சிகரெட்டுகள் புகைக்கப்பட்டு, 8 லட்சம்   சிகரெட் பஞ்சுகள் உருவாகின்றன. சிகரெட் பஞ்சுகளிலிருந்து உருவாகும் கார்பனுக்கு Hydrochar என்று பெயர். இவை போரஸ் கார்பன் வேதிப்பொருட்களை ஆக்சிஜனோடு சேர்ந்து உருவாக்குகின்றன. இது ஹைட்ரஜனை உள்ளிழுக்கும் தன்மை கொண்டது என்பதால் இந்த ஆராய்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது.