விபரீத உளவியல் சோதனைகள்!



தற்கொலைக்கு தூண்டிய டெஸ்ட்!

ஸிஸோபெரெனியா, மன அழுத்த சிகிச்சைக்காக டோனி லாமேட்ரிட் என்ற இளைஞர் UCLA மெடிக்கல் சென்டரில் சேர்ந்தார். ஸிஸோபெரெனியா ஆய்வுக்காக டோனியை பயன்படுத்திக்கொண்டார் உளவியலாளரான  கீத் நூச்டர்லெய்ன் மற்றும் மைக்கேல் கிட்லின்.

இதில் ஸிஸோபெரெனியா சிகிச்சைக்கான மருந்துகளை நிறுத்தி, மூளையின் செயல்பாட்டை கவனிப்பது ஒரு டெஸ்ட். இதில் 90% நோயாளிகளுக்கு  தீவிரமான மனநல பாதிப்பு  ஏற்பட்டுவிட்டது. டோனி, மனநலபாதிப்பு முற்றி கட்டிடத்திலிருந்து எட்டிக்குதித்து  தற்கொலை  செய்துகொண்டதுதான் டெஸ்ட்டின் சோக முடிவு.

மூளையில் ஒரு மின்னல்!

1960 ஆம் ஆண்டு. நியூயார்க்கிலுள்ள பெல்லேவ் மருத்துவமனையில் ஆட்டிஸத்தை தீர்க்க முயற்சி செய்துகொண்டிருந்தார் லாரெட்டா பெண்டர். ஆட்டிசத்தை ஸிஸோபெரெனியா  போன்றது என  கோக்கு மாக்காய்  புரிந்துகொண்டவர்,  ஆட்டிச  குழந்தைகளை  சித்திரவதை  செய்தார்.

இன்சுலினை  ஓவர்டோஸ் செலுத்தி  குழந்தைகளை கோமாவில் தள்ளுவது, பின், LSD, Thorazine ஆகிய  மருந்துகளோடு ஷாக்கும் கொடுத்து சோதிக்க அவர்கள் மனப்பதற்றம்  கொண்டவர்களாக  மாறினர்.

12  வயதிற்குட்ட  நூறு  குழந்தைகளை இம்முறையில் லேப் எலிகளாக்கினார். பல சிறுவர்கள் கடும் வன்முறையாளர் களாக மாறி பின்னாளில் கொலைகாரர் களாக மாறியதோடு, சிலர் சிகிச்சையின் பக்கவிளைவுகளைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.

பாலுறுப்பு ஆபரேஷன் குளறுபடி!

1965 ஆம் ஆண்டு கனடாவின் மனிடோபாவில் ப்ரூஸ், பிரியன் என இரட்டையர் பிறந்தனர். அதில் இருவருக்கும் phimosis எனும் பாலுறுப்பு முன்தோல் சுருக்கம் பிரச்னை  ஏற்பட்டிருந்ததை  டாக்டர்கள் கண்டறிந்தனர். அதில்  ப்ரூசுக்கு  செய்த  ஆபரேஷன்,  தவறாகி  ஆணுறுப்பை அகற்ற வேண்டிய நிலை.

ப்ரூசுக்கு  சிகிச்சையளிக்க மருத்துவர் ஜான் மனி முன்வந்தார்.  பாலுறுப்பு  மாற்று  சிகிச்சையில்  ப்ரெண்டா  என்ற பெண்ணாக  ப்ரூஸை  மாற்றினாலும்  மனதளவில் அவரை  பெண்ணாக  உணரவைப்பதில்  ஜான் மனிதோற்றுப் போனார்.  பெண்  ஹார்மோன்கள்,  ட்ரெஸ்கள்  அனைத்தும்  ப்ரூஸை  துயரப் படுத்த  தன் 38 வயதில் கார்  பார்க்கிங்கில்   துப்பாக்கியால்  சுட்டு தற்கொலை  செய்து கொண்டார்.

விக்டர் காமெஸி