அரிய சலமாண்டர் பல்லி!



குவாத்திமாலாவில் அழிந்துவிட்டது என ஆராய்ச்சியாளர்களால் கருதப்பட்ட அரிய சலமாண்டர் பல்லி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; அதுவும் 42 ஆண்டுகளுக்குப் பிறகு. 1975 ஆம் ஆண்டு க்குப் பிறகு ஆய்வாளர்களுக்கு தென்படாத சாலமாண்டர் பல்லி தற்போது கண்டறியப்பட்டுள்ளது.தற்போது கண்டறியப்பட்டுள்ள Bolitoglossa jacksoni என்ற பல்லிக்கு கோல்டன் ஒண்டர் என்று பெயர்.

Finca San Isidro Amphibian Reserve பகுதி வனக்காவலரான ரமோஸ் லியோன் சலமாண்டர் பல்லி யைக் கண்டறிந்து, படமெடுத்து USAC பல்கலைக்கழக உயிரியல் ஆராய்ச்சியாளரான  கார்லோஸ்  வாஸ்க்வசுக்கு அனுப்பியிருக்கிறார்.

பால் இலியாஸ், ஜெர்மி ஜாக்ஸன் என்ற இரு மாணவர்கள்தான் 1975 ஆம் ஆண்டு  இரு  சலமாண்டர்  பல்லிகளை  Sierra de los Cuchumatanes காட்டில் முதன்முறையாகக் கண்டறிந்தனர். அழிந்துவிட்ட  உயிரிகள் லிஸ்ட்டில்கூட சலமாண்டர் பல்லிகள் சேர்க்கப் பட்டுவிட்ட நிலையில் ரீஎன்ரியான சலமாண்டர்  பல்லி நம்பிக்கை தந்துள்ளது.