சீனா ஜெயிக்க காரணம் என்ன?



2016 ஆம் ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி 264 பில்லியன் டாலர்கள்  எனில் சீனாவின்  ஏற்றுமதி 2,098  பில்லியன் டாலர்கள். இந்தியச்சந்தையை சீனர்கள் எப்படி வளைத்தார்கள் என்பதை பார்ப்போம்.  

* மெகா தயாரிப்பு - இந்தியர்கள் இரண்டு மெஷின்களில் குடம் செய்கிறார்கள் என்றால் சீனாவில் 70 மெஷின்கள் அதை செய்கின்றன. பணியாட்களின் உற்பத்தித் திறன் 5  மடங்கு  அதிகம். நூறு  பணியாளர்களை பணியில் அமர்த்த Industrial Disputes Act of 1947,Contract Labor Act of 1970 ஆகிய சட்டங் களின் குறுக்கீடு  இங்கு அதிகம்.
 
* ஊழலும் போக்கு வரத்தும்- ஊழல் பட்டியல் 2016 படி 176 நாடுகளில் இந்தியாவும் சீனாவும் 76 வது  இடம் வகித்தாலும் தினசரி வாழ்வில் சீனர்களுக்கு ஊழல் குறுக்கீடு குறைவு. மேலும் யூனியன்களின் வரை முறையற்ற ஸ்ட்ரைக் தொல்லைகள் சீனாவில் கிடையாது. மும்பை - டெல்லி தூரத்தைவிட  சீனாவின் குவாங்சூவிலிருந்து  மும்பை 5 மடங்கு தூரம் அதிகம்.

ஒரு கன்டெய்னருக்கு  ஆயிரம்  டாலர் செல வெனில்,  ஒரு   சிலைக்கு  4  சென்ட்ஸ்.  இதோடு தடையற்ற  மின்சாரம், அரசு மானியங்கள் ஆகியவையும் சீனா உலகச் சந்தையில் ஜெயிக்க காரணம்.