உடையாத கண்ணாடி!



ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கீறல்கள், உடைசல்களை தானாகவே சரிசெய்துகொள்ளும் கண்ணாடியை கண்டுபிடித்துள்ளனர். அறைவெப்பநிலையில் (21 டிகிரி செல்சியஸ்) 30  செகண்டில்  இவர்கள் கண்டுபிடித்த  கண்ணாடியிலுள்ள பாலிமர் (‘polyether-thiourea’)  என்ற பொருள் உடைந்த கண்ணாடியை இணைக்கிறது. யூகி யானாகிஸாவா என்ற வேதியியல்  மற்றும்   உயிரி   தொழில் நுட்ப மாணவரின் ஐடியாவில்  இக்கண்ணாடி  உருவாகியுள்ளது.

உடைந்த  கண்ணாடி தானே சரியாவது புதிய விஷயமல்ல. ஆனால் தற்போதையை கண்டுபிடிப்பு, முந்தைய கண்டுபிடிப்பை  விட மேம்பட்டுள்ளது நாம் அறியவேண்டிய செய்தி. “உடைந்த கண்ணாடி தானே சரியாவது எதிர்காலத்தில் சூழலைக் காக்க உதவக்கூடும்” என நம்பிக்கையாகப் பேசுகிறார் யானாகிஸாவா.  இதே தொழில்நுட்பம் எதிர்காலத்தில் மனிதர்களின் உடலுக்கும் ஷிப்ட் ஆக சான்ஸ் இருக்கிறது.