க்வார்ட்ஸ் வாட்ச்!



முன்பு உருவான வாட்ச்சுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சாவி கொடுக்கவேண்டும். மேலும் பெண்டுலம் கடிகாரம் புவிஈர்ப்பு விசை, வெப்பநிலை பொறுத்து நேரத்தை மாற்றிக்காட்டுவதும்  உண்டு. அப்போது புதிய கண்டுபிடிப்பாக வந்து இன்றுவரை நமக்கு நேரத்தை கறார் கச்சிதமாக காட்ட உதவுவது க்வார்ட்ஸ்.

பெரும்பாலான வாட்ச்சுகளில் பயன்படும்  க்வார்ட்ஸ், சிலிகன் டையாக்ஸைடால் உருவாகிறது. இது மணல், பாறைகளில் கிடைக்கும்   கனிமம்.  பேட்டரியில்  பெறும்  மின்சாரத்  தூண்டுதல்  பெற்று  க்வார்ட்ஸ் ஏற்படுத்தும்  சில  அசைவு களுக்கு piezoelectricity என்று பெயர்.  அசைவுகள்  மின்துடிப்புகளாக  மாற்றப்பட்டு  எந்திரங்கள் இயக்கப்பட எல்சிடி திரையில் நேரம் காட்டப்படுகிறது.

வாட்ச்சில் மட்டுமல்லாமல்,  ரேடியோ, மைக்ரோப்ரோசஸர்கள் உள்ளிட்ட பல்வேறு டெக் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளை க்வார்ட்ஸ் கொண்டுள்ளது. இன்றைய எலக்ட்ரானிக் பொருட்களில் பெருமளவு பயன்படும் க்வார்ட்ஸ்  செயற்கையானவை.