கற்காலப் பெண்ணின் முகம்!



ஏதென்ஸ் மற்றும் ஸ்வீடன் அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒன்பதாயிரம் ஆண்டுகால  கற்கால பெண்ணின் முகத்தை படிமங்கள்  மூலம்  கண்டறிந்து  தோராயவடிவில்  உருவாக்கியுள்ளனர்.கிரீக்கின் தியோபெட்ரா குகையில் Dawn என்ற கற்காலப் பெண்ணின் படிமங்கள் கண்டறியப்பட்டன. ஏறத்தாழ இது 9 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது.

 1993  ஆம்  ஆண்டு கண்டறியப்பட்ட  படிமங்கள் அக்ரோபோலிஸ் மியூசியத்தில்  வைக்கப்பட்டுள்ளன.  பதினெட்டு வயதுக்குள்  இருக்கும்  இப்பெண்ணின் உருவத்தை பல் கலைக்கழகத்தின் பல்வேறு  துறையினரும்  ஆராய்ந்து  யூகமாக 3டி  முறையில்  உருவாக்கியுள்ளனர்.  ரத்தசோகை, ஈறுகளில் ரத்தக் கசிவு ஆகிய பிரச்னைகள் இப்பெண்ணுக்கு இருந்திருக்கலாம்   எனவும்  ஆராய்ச்சியாளர்களின்  ஆய்வில் தெரிய வந்துள்ளது.