ஆச்சர்ய குழந்தைகள்!




Daliyah Marie Arana

அமெரிக்கர்கள் ஆண்டுக்கு ஐந்தே ஐந்து புத்தகங்கள் படிக்கிறார்கள் என்கிறது ஆய்வு. ஜார்ஜியாவைச் சேர்ந்த ஐந்து வயது பெண் தாலியா மேரி ஆரானா, கிண்டர்கார்டனில் அட்மிஷன் வாங்குவதற்குள் படித்து முடித்த நூல்களின் எண்ணிக்கை 1000. கடந்தாண்டின் ஜனவரி மாதம், லைப்ரரி ஆஃப் காங்கிரஸின் கௌரவ நூலகராகவே கௌரவிக்கப்பட்டார் தாலியா.

“என்னுடைய வகுப்பு மாணவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன்.  ஐந்து மாத குழந்தையான என் தம்பி டிமெட்ரியோவுக்கு நூல்களை வாசித்துக் காட்டத் தொடங்கிவிட்டேன். இரண்டு வயதிலிருந்து நூல்களை அவன் வாசிப்பான்” என புதிய நூலை வாசிக்க கையில் எடுக்கிறார் தாலியா.

Giselle Bazos

மூன்றாவது படிக்கும்போதே பொருட்களை தொலைக்கத் தொடங்கினார் ஜிசெல் பசோஸ். டஜன் கணக்கில் பொருட்களை தவறவிட்டு தாயிடம் திட்டுகளை வாங்கினார். பொருட்களை வைக்கும்  சிறிய பாக்ஸை  கையில் கட்டிக்கொள்ளும்படி ரீடெய்னரை கண்டுபிடித்து பெருமூச்சு விட்டார் ஜிசெல். 2017 ஆம் ஆண்டு  தேசிய  கண்டுபிடிப்பு கண்காட்சி யகத்திற்கு தனது ஐடியாவை தானம் செய்தவர்,  புதிய கருவியைக் கண்டறியும் ஆய்வில் உள்ளார்.
 
HENRY BURNER 

நான்காம் வகுப்பு மாணவர்  ஹென்றிக்கு பள்ளியில் வணிக ப்ராஜெக்ட் ஒன்றைக் கொடுத்தார்கள். வழக்கமான வழியை கைவிட்டு,  அம்மாவின்  உதவியுடன்  இணையத்தில்  பின்பேக்பட்டன்களை (சட்டையில் அணியும்படியான பேட்ஜ்) விற்கும் நிறுவனத்தை தொடங்கினார். இவரின் Buttonsmith, Inc., ஃபோர்ப்ஸ் நிறுவனத்தில் பாராட்டப்பட்டுள்ளதோடு, வால்மார்ட் கடைகளிலும் சேல்சில் சக்கைபோடு போடுகிறது.

AMARIYANNA COPENY 

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதிச் சிறுமியான கோபெனி, தன் ஏரியா நீர்நிலையில் லெட் வேதிப்பொருள் கலந்து மக்கள் தோல்நோய்களால் அவதிப் பட்டதைக் கண்டு அதிர்ந்தார். மார்ச் 2016 அன்று முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு நிலைமையை  விளக்கி லெட்டர்  எழுதினார் எட்டு வயசு கோபெனி. சில மாதங்களுக்குப் பிறகு, ஒபாமா கோபெனி பாப்பாவை சந்திக்க ஃபிளின்ட் பகுதிக்கு வருவதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல்
வந்தது. பின்னர், லிட்டில் மிஸ் கோபெனியாக புகழ்பெற்று மத்திய  மிச்சிகன் பல்கலையின்  25 ஆயிரம் டாலர்கள் ஸ்காலர்ஷிப் வென்றார். தற்போது தனது பகுதி மக்களுக்கு  பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

கா.சி.வின்சென்ட்