ப்ராஜெக்ட் DR



டாக்டர்களால் நோயாளியின் உடம்பை சூப்பர்மேன் போல எக்ஸ்‌ரே பார்வையால் உடலை ஊடுருவிப் பார்க்க முடிந்தால், செயலிழந்த உறுப்புகளையும் நொறுங்கிய எலும்புகளையும் ஈஸியாக சொஸ்தப்படுத்த முடியுமே!  அதற்காகத்தான் வந்திருக்கிறது ப்ராஜெக்ட் DR.
ஆல்பெர்ட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது.

 எம்ஆர்ஐ அல்லது  சிடி போல குறிப்பிட்ட உடலின் பாகங்களை  மட்டு மல்லாது  முழு உடலையே கண்ணாடி போல காட்டும் திறன் பெற்றது. ப்ரொஜெக்டர்ஸ், அகச் சிவப்புக் கதிர் கேமராக்கள், மார்க்கர்கள் இதில் நோயாளியின் உடலில் செயல்படுகிறது.

குறிப்பிட்ட ரத்த திசுக்கள்,உள்ளுறுப்புகள் என தனித் தனியாக இதில் தெளிவாகப் பார்க்கலாம். “பிசியோதெரபி, லேப்ராஸ்கோபி, அறுவை சிகிச்சைகள் என பல்வேறு செயல்பாடுகள்  இந்த டெக்னாலஜியை  மையப்படுத்தி  நடைபெறுகின்றன” என்கிறார் கணினி பொறியியலாளரான இயான் வாட்ஸ்.