மார்க்கெட்டுக்கு புதுசு!




HTC Desire 12 and HTC Desire 12+

உங்கள் போன் பெரியதாக, போல்டான அழகில் அதுவும் பட்ஜெட்டுக்குள் வேண்டும் என்றால்  ஹெச்டிசி டிஸையர் 12  ஒரே சாய்ஸ். 18:9 இன்ச் ஸ்க்ரீன், 13 எம்பி கேமரா,  கழற்றமுடியாத 2965 mAh பேட்டரி, 3 ஜிபி ராம்,  ஆண்ட்ராய்ட் ஓரியோ என சுமார் என்று ரேட்டிங் சொல்ல முடியாத தரத்தில் 157 கிராம் எடையில் விரைவில் ரிலீஸ்.
 
Bose SoundSport

ப்ளூடூத் வசதிகொண்ட போஸ் நிறுவனத்தின் அதி அழகான ஹெட்செட் இது. ஹெட்செட்டை கப்போர்ட்டில் வைத்துவிட்டு மறந்து போனாலும் போனிலுள்ள டைல் ஆப்பின் மூலம் எளிதாகக் கண்டுபிடித்து இசைச் சூறாவளியில் கரைந்துபோகலாம்.

da Vinci 3D Pen Cool

கின்போ நிறுவனத்தின் பெருமைமிக்க புத்தம் புதிய 3டி பென் டூல்தான் டாவின்சி. 3டி முறையிலான நானோ பிரிண்டர், இங்க்ஜெட் பிரிண்டர் Aio ஆகியவற்றையும் கம்பெனி
விற்பனை செய்து வருகிறது.