புகைப்படக்காரரின் கண்டுபிடிப்பு!



இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த  அன்செல் ஆடம்ஸ் மிகச்சிறந்த புகைப்படக்காரர். இவரின் Denali and Wonder Lake  என்ற அலாஸ்காவில் எடுக்கப்பட்ட புகைப்படம் 1940 ஆம் ஆண்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. எப்போது எடுக்கப்பட்டது என்பதுதான் சர்ச்சை.  
போட்டோகிராபர்கள் கேமராவில் பயன்படுத்திய ஃபிலிம், ஃபில்டர் பற்றி நினைவில் வைத்திருப்பார்கள்.

நாள், நேரம் எல்லாம் ஆடம்ஸ் குறித்துவைக்கவில்லை. இதுபற்றி ஆய்வு செய்த டெக்ஸாஸ் பல்கலைக்கழக வானியல் ஆய்வாளரான ஆல்சன்,  ஏரி மர்மத்தை பின்னாளில் கண்டறிந்தார். ஏரியில் நிலவு தெரியும் படத்தையும், ஆடம்ஸின்  ஏரி  படத்தையும்  ஒப்பிட்டு ஆராய்ந்தார் ஆல்சன்.  

டோபோகிராபி மூலம் ஆய்வாளர் ஆல்சன் மற்றும் அவரது மாணவரான அவர் போப் இணைந்து கணினி புரோகிராம்  ஒன்றை எழுதி ஏரி மற்றும்  நிலவு இருந்த படங்களை கணக்கிட்டனர். இதில் ஏரியில் நிலவு தெரியும் படம் எடுக்கப்பட்ட நேரம் 1948 ஆம் ஆண்டு இரவு
8.48 என்றும் ஆடம்ஸின் ஏரி படம் எடுக்கப்பட்டது அதே ஆண்டு ஜூலை 15, அதிகாலை 3.42 எனவும் கண்டுபிடித்து அசத்தினார்.