குப்பை போராளி!



தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் பணிபுரிந்து வந்த நோமுண்டு என்லோவு தன் சிறிய ஊரான ஸ்டீன்போக்குக்கு கிளம்பினார். அங்கு தன் நண்பர் சியபோங்காவுடன் இணைந்து குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழில் முயற்சியை சியாபடி என்ற நிறுவனத்தின் மூலம் தொடங்கி னர்.

பிரிடோரியா மற்றும் ஜோகன்னஸ்பர்க்  நகரங்களிலுள்ள நிறுவனங்களுக்கு குப்பைகளை சியாபடி விற்றுவருகிறது. இங்கு 10% குப்பைகள் மட்டுமே மறுசுழற்சிக்கு செல்கின்றன. விரைவில் குப்பையிலிருந்து மின்சாரம்,  பயோடீசல்  உற்பத்தி  செய்ய  திட்டமிட்டிருக்கிறார் நோமுண்டு.

குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக அரசின் மானிய உதவி  3,80,000 டாலர்களை சியாபடி பெற்றுள்ளது. ஆனால் கிராமங்களில் மறுசுழற்சி மையங்கள் கிடையாது  என்பது  குப்பைகளைக் குறைக்கும் பணியில் பெரும் தடை. ஏழு முழுநேரப் பணியாளர்கள் கொண்ட சியாபடி, முனிசிபாலிட்டிகளின் வேலையை பெருமளவு குறைத்துள்ளது.

தற்போது 60-700 டன்கள் கழிவுகளை மறுசுழற்சி செய்துவருகிறது சியாபடி என்பது நம்பிக்கை தருகிற முயற்சி. எம்பாம்பெலா முனிசிபாலிட்டியில் கழிவுகளை பயோடீசலாக மாற்றும் எந்திரங்களை அமைக் கும் முயற்சியிலுள்ளார் நோமுண்டு.