ஐடியாவுக்கு துட்டு!



ஸ்டார்ட்அப் மந்திரம் 6

கம்ப்யூட்டருக்கு மின்சாரம் எப்படியோ அப்படித்தான் ஐடியாவுக்கு முதலீடு முக்கியம். ஸ்டார்ட்அப் ஐடியாவை மூளையில் தோன்றியவுடன் ஆராய்ச்சி செய்து அதை எப்படி பிராக்டிக்கலாக செய்வது என அறிந்துகொள்வது அவசியம். ஏன்? ஒருவரிடம் தொழிலுக்கு பணம் கேட்டால் தொழில் வாய்ப்பு வளர்ச்சி பற்றி சொல்ல வேண்டாமா?  தொழில் ஐடியா, தொடங்கும் இடம், வாய்ப்பு, வளர்ச்சி  தகவல்களை விரல் நுனியில் வைத்திருந்தால்தான் முதலீடு சாத்தியம்.

முதலீட்டாளர்களுக்கு அர்ஜுனன் அம்புகளாய் இமெயில்களை அனுப்பாமல், முடிந்தவரை நேருக்கு நேர் சந்திக்க முயற்சியுங்கள். ஆப்பிள் பொருட்களை அறிமுக நிகழ்ச்சி யில் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி மார்க்கெட்டிங் செய்கிறார் என்பதைப் பார்த்தால் உங்களுக்கே நம்பிக்கை பிறக்கும். ஆப்பிள் ஸ்டோர் முன் க்யூவில் மக்கள் நிற்கிறார்கள் என்றால் அதற்கு ஸ்டீவ் ஜாப்ஸின அயராத ஐக்யூ உழைப்பு முக்கியக்காரணம்.

பணம் திரட்டும்போது பங்குகளை விற்று அதனைப் பெறாமல், கடன்வாங்கி வியாபாரத்தை விரிவாக்கி பின்னர் கிடைக்கும் லாபத்தின் ஒருபகுதிமூலம் கடனைக் கட்டுவது சிறந்த வழி. “ஸ்டார்ட்அப்புக்கு நிதி திரட்டுவது சாதாரண பணியல்ல, தொடர்ந்து முயற்சிக்க
வேண்டும்” என்கிறார் ஸ்டார்ட்அப் முதலீட்டாளர் சைரத்.

தற்போது உணவுத்துறை சார்ந்த  ஸ்டார்ட்அப்புகள்  வெற்றிக்குமேல் வெற்றி பெற்றுள்ளன. அண்மையில் ஸோமாடோ(2018), அலிபாபா வின் ஆன்ட் நிதிநிறுவனத்திடமிருந்து  150  மில்லியன் டாலர் களும், ஸ்விக்கி 100 மில்லியன் டாலர்களும் பெற்றுள்ளன. “உணவு ஸ்டார்ட்அப்களை தொடங்க இது முக்கியமான நேரம்.

வாடிக்கையாளர் பரப்பு வளர்ந்து வருவதோடு, மார்க்கெட்டின் வியாபாரமும் முன்னேறிவருகிறது” என்கிறார் ஃபுட்பாண்டா நிறுவன இயக்கு நரான பிரணாய் ஜிவ்ராஜ்கா. 2016-17 ஆம் ஆண்டில் இத் துறையின் முதலீடு 70 மில்லியன். இவ்வாண்டின்(2018) முதலீடு 370 மில்லியன் டாலர்கள் என்பது வளர்ச்சிதானே!

சாப்பிட வாங்க!

உணவு டெலிவரி ஸ்டார்ட்
அப்புகள் - 990
உணவுத்தொழில்நுட்பம் - 500 மில்லியன் (2015-16), 70 மில்லியன் (2016-17),  370 மில்லியன் (2017-18)
உணவு ஆர்டர்கள் (2017) -
பெங்களூரு (95,000), டெல்லி (87,000), மும்பை (62,000)
தினசரி ஆர்டர்கள் (தோராயமாக) - 4,50,000 (2017), 2,00,000 (2016). இந்த வாரம் வாசிக்க
வேண்டிய நூல்: Think and Grow Rich by Napoleon Hill

(உச்சரிப்போம்)

கா.சி.வின்சென்ட்