அம்மா (எ) அலைஸ் சுமோ!



லைபீரியாவிலுள்ள மாண்ட்செராடோ கவுண்டியில் மருத்துவராகப் பணியாற்றும் அலைஸ்  சுமோவின் பெயர் அங்கு பிறந்துள்ள ஆயிரம் குழந்தைகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. 2004-2005 காலகட்டத்தில் துப்பாக்கி முனையில் சாலையோரத்தில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து முதன்முதலாக தன் பணியைத் தொடங்கினார் அலைஸ். உள்நாட்டுப்போர், எபோலா வைரஸ் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் பேரை தன் மருத்துவத்தால் காப்பாற்றியுள்ளார் அலைஸ் சுமோ.

பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் அலெக்ஸ், பெண்ணாக இருந்தால் அலைஸ் என பெயர்சூட்டி அலைஸ் சுமோவை அந்நாட்டு மக்கள் கௌரவிக்கிறார்கள். 30 ஆண்டு கால மருத்துவப்பணியில் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் தன் மருத்துவ மனையில்  பிரசவம் பார்த்துள்ளார் அலைஸ். அலைஸ் என்றால் ‘அமைதி’ என்று அர்த்தம்.