பிட்ஸ்!



*பாதாம் பருப்புகள் மற்றும் பீச் பழம் ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உணவுப்பொருட்கள்.

*மாத காலண்டரில் 13 ஆம் தேதியைப் பார்த்து மனதில் ஏற்படும் பயத்திற்கு Paraskavedekatriaphobia  என்று பெயர்.

*அமெரிக்க அதிபராக இருந்த ஜெஃபர்சனுக்கு அலுவலக மிடுக்கு ஆடைகள் என்றால் ஆகாது. தனது வெளிநாட்டு விருந்தினர்களைச் சந்திக்கும்போது பைஜாமாக்கள் அணிவதே இவரின் ஸ்டைல்.

*சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் அனிமேஷன் திரைப்படம் Beauty and the Beast.

*1968 ஆம் ஆண்டு அலுவலகத்தின் க்யூபிகிள் வடிவ டிசைனை உருவாக்கியவர் ராபர்ட் ப்ராப் ஸ்ட். ‘பணியாளருக்கான சுதந்திரமான  டிசைன்’ என இவரின் வடிவமைப்பு புகழ்பெற்றது.