யானை வீரன்!



மலேசிய கட்டுமான நிறு வனத்தில் பணியாற்றிய டென்சிங், வண்டி ஓட்டவும், எந்திரங்களைப் பழுதுபார்த்து பழகியதோடு ஆங்கில பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொண்டார். 2006 ஆம் ஆண்டு தாயின் அழைப்பின் பேரில் அசாம் திரும்பிய டென்சிங், யானைகளை பாதிக்காத
வகையில் இன்று 52 ஏக்கரில் தேயிலைத்தோட்டத்தை உருவாக்கி பராமரித்து வருகிறார்.

அமெரிக்காவின் மொன்டானா பல்கலைக்கழகம், வனவிலங்கு  நட்பு  தொழிலக  இணைப்பகம் (WFEN) ஆகியவை டென்சிங்கின் இரு தேயிலைத்  தோட்டங்களுக்கு உலகின் முதல் யானைகளுக்கு இசைவான தேயிலைத்தோட்டம் என்று சான்றிதழ் வழங்கியுள்ளன. டென்சிங் தனது தேயிலைத்தோட்டத்திற்கு வேலியிடாமல் யானைகளை தோட்டத்தின் வழியே நடந்து செல்ல அனு மதித்துள்ளார்.

“தேயிலைத்தோட்டத்திற்கு முன்பு யானைகள் வழித்தடம்  இதுதான். அதன் வாழிடத் தை அழித்தது மனிதர்கள்  தான்’’ என்கிறார் டென்சிங். யானை
களுக் கென தேயிலைத் தோட்ட ஓரத்தில் மூங்கில்களையும் வளர்க்கிறார் இவர். அசாமில் கடந்தாண்டில் 48 யானைகள் ரயில்விபத்து மற்றும் விஷம் கொடுத்து கொல்லப்பட்டுள்ளன.

இதோடு யானைகள் மூலமாக 35 மனிதர்களும் பலியாகியுள்ளனர் என்பது சூழலியலாளர் முபினா அக்தரின் தகவல். கடந்த 75 ஆண்டுகளில் மிஞ்சியுள்ள ஆசிய யானைகள் 40 ஆயிரம்-50 ஆயிரம்தான்.