சூழல் கட்டடங்கள்!



இங்கிலாந்திலுள்ள 5,500 தேவாலயங்கள் (லிவர்பூல் கதீட்ரல் உள்ளிட்டவை) புதுப்பிக்கும் ஆற்றல் கொண்டவையாக மாற்றப்பட்டுள்ளன. பசுமை மாற்றங்களை செயல்படுத்திய பிற கட்டுமானங்கள் எவை…

தாஜ்மஹால்  

தாஜ்மஹாலைச் சுற்றி 500 மீட்டர் தூரத்திற்கு குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது இந்திய அரசின் திட்டம். ஒருமுறை பயன்படுத்தி எறியும் பிளாஸ்டிக் அதிகரிப்பு குறித்த எச்சரிக்கை இந்த அறிவிப்புக்கு முக்கியக் காரணம்.
 
நிலக்கரி அருங்காட்சியகம்  

அமெரிக்காவின் ஹாரியன் கவுன்டியிலுள்ள கென்டக்கி நிலக்கரி மியூசியத்தில் சூரிய ஒளி ஆற்றல் மின்சாரத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. நிலக்கரி மற்றும் சோலார் என இருவகை ஆற்றலும் அருங்காட்சியகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
அறிவியல் கழகம்  

2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இயங்கத்தொடங்கிய அமெரிக்காவின் கலிஃபோர்னியாவிலுள்ள அறிவியல் கழகம், உலகின் முதல் பசுமை அருங்காட்சியமாக புகழ்பெற்றுள்ளது.