அநீதிக்கு எதிராக ஆசிரியர்!



நைஜீரியாவில் நடைபெறும் போகோ ஹராம் பற்றி சிலர் மட்டுமே பேசுகிறார்கள். “உள்நாட்டுப்போரால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அழிந்தநிலையில் முகத்திரை அணியாத குற்றத்திற்காக இன்னும் எத்தனை பெண்களைப் பலிகொடுக்க முடியும்?” என துணிச்சலாகப் பேசுகிறார் ஆசிரியரான ஹம்சது அலாமின். 30 ஆண்டு ஆசிரியர் பணியை 2016 ஆம் ஆண்டு கைவிட்டு போகோ ஹராம் வன்முறைக்கு எதிராகப் போராடிவரும் புரட்சி யாளர் இவர்.   

வசதியான கனூரி பழங்குடிக்குடும்ப வாரிசு. தனது சமூகத்தில் நிகழும் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தத் தொடங்கினார். 2013 ஆம் ஆண்டு போர் தொடங்கும் முன்பு போகோஹராம் குழுவினர் மறைந்திருந்து ராணுவத்தின் மீது தாக்குதல்களை நடத்தினர். ராணுவம் பதிலடியாக பழங்குடிகளின் குழந்தைகளைக் கைது செய்து வீடுகளை நொறுக்கியது.

அமைதி தூதராக நின்ற அலாமின், மிட்செல் ஒபாமா அறைகூவல் விடுத்த “Bring Back Our Girls” என்ற திட்டத்தையும் ஒருங்கிணைத்துள்ளார். 7 லட்சம் பேர்களுக்கு மேல் நைஜீரியாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா சபை அறிக்கை கூறுகிறது. தற்போது நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டு கல்வியளித்து வருகிறார் அலாமின்.