வாசிப்பு வீழ்கிறதா?



ஜீ ன்ஸ் பாக்கெட்டுகளில் வைக்கமுடியாத சைசிலுள்ள ஸ்மார்ட்போன்கள்தான் யூத்களின் ஒரே ஆயுதம். வாசிப்புக்கு இ-புக் முதல் வைரல் வீடியோக்கள் வரை போன்களே உதவும்போது தனியே புத்தகங்கள் எதற்கு?

2006-2016 காலகட்டம் வரை இளைஞர்கள் டிஜிட்டல் ஊடகங்களில் செலவிடும் நேரம் அதிகரித்துவருகிறது. அமெரிக்காவில் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடம் நடத்திய சர்வேயில் பத்தில் ஒன் பதுபேர் தினசரி சமூகவலைத்தளங்களைப் பார்க்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது. எட்டாம் வகுப்பு மாணவர்களில் பத்தில் ஒருவர் வாரத்திற்கு 40 மணிநேரங்கள் வீடியோ கேம்களை விளையாடியுள்ளார்.

பொதுவாக ஐஜென் எனும் 1995 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்களின் பால்யத்தை ஆக்கிரமிப்பது ஸ்மார்ட்போன்களின் திரைகள்தான். 1980 களில் 60 சதவிகிதமாக இருந்த வாசிப்பு பழக்கம், இன்று 16 சதவிகிதமாக குறைந்துள்ளது.

சமூகத்தோடு இளைஞர்கள் தொடர்புகொள்ளும் இடைமுகமாக போன்களே உள்ளன. தினசரி இரண்டு மணிநேரம் என போன்களைப் பயன்படுத்துவது தவறல்ல; மனதை ரிலாக்ஸ் செய்ய பாடல்கள் அல்லது நூல்களை நாடுவது மனதின் பிரச்னைகளையும் சரிசெய்யும்.