வியாழனில் நீர்!



பூமியைப் போல இருமடங்கு சைசிலுள்ள வியாழனின் பரப்பில் நீரின் தடத்தை நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு அமெரிக்க  பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டறிந்துள்ளனர். ஹவாயின் மௌனா கியா எரிமலை அருகே அமைக்கப்பட்டுள்ள  இரண்டு டெலஸ்கோப்புகள்(iSHELL, NIRSpec) மூலம் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.   

இவ்விரண்டு அகச்சிவப்பு கதிர்கள் டெலஸ்கோப்புகளும்  வியாழனிலுள்ள வாயுக்களை அளவிட்டு பதிவு செய்த படங் களைக் கொண்டு  ஆராய்ச்சியாளர்கள் வியாழனில் நீர் உள்ளதை  கண்டுபிடித்துள்ளனர். “வியாழனிலுள்ள (Red Spot) மேகங் களின் அடுக்குகளிலுள்ள வேதிப்பொருட்களை கண்டறிந்துள் ளோம்” என்கிறார் ஆராய்ச்சி யாளர் மடே ஆதம்கோவிக்ஸ். வியாழனை ஜூனோ விண்கலம் சுற்றிவரும்  நிலையில் பூமியை விட அதிக நீர்வளம அங்கு இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் யூகிக்கின்றனர். சோதனை வெற்றியடைந்தால் சனி,  யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றிலும் சோதனைகள் தொடரலாம்.