நகம் கடிக்கும் பழக்கம் ஆபத்தானதா?



ஏன்?எதற்கு?எப்படி?

பஸ், ட்ரெயினுக்காக காத்திருக்கும்போது சிலர் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் கால் மாற்றி நின்று சகஜமாக நகம்கடிப்பது, புறத்தில் நன்று; அகத்தில் ஆபத்து! பயப்படாதீர்கள். உலகில் 30% பேருக்கு நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது.
‘மக்கள் நகம்  கடிப்பதற்கு மன அழுத்தம் காரணம் என பொதுவாகக் கூறினாலும் சலிப்பு, தனிமை ஆகியவற்றையும் சமாளிக்க பலரும் நகம் கடிக்கின்றனர்’ என்கிறார் மான்ட்ரீல் மனநல பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஓ கானர்.

சூழலைச்  சமாளிக்க  உதவும் நகம் கடிக்கும் பழக்கம் பர்ஃபெக்ட் மனிதர்களுக்கு ஆஸ்தான அடையாளம். அதேசமயம் நகம் கடித்தல் தீவிரமானால் அதன் பெயர் onychophagia. நோ டவுட், உளவியலாளரிடம் கவுன்சிலிங் அவசியம் தேவை.

Mr.ரோனி