அலிபாபாவின் ரோபோ!



சீனாவின் இ-காமர்ஸ் தளமான அலிபாபா, ட்ரோன் மற்றும் கார் வெண்டிங் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி மக்களிடம் லைக்ஸ்களை அள்ளியது. தற்போது  அலிபாபாவின் ஏஐ லேப் தயாரித்துள்ள ரூம் சர்வீஸ் ரோபோ விரைவில் ஹோட்டல்களில் பணிக்கு வரவிருக்கிறது.  

3.3 அடியுள்ள அலுமினிய ரோபோ அறைவாசிகளிடம் ஆர்டர்களைப் பெற்று அதனை உணவக பணியாளர்களிடமிருந்து பெற்று வழங்குவது அதன் நோக்கம். லேசர் மற்றும் ரேடார் சென்சார்களை பயன்படுத்தி லிஃப்டில் ஏறுவது, மனிதர்களுடன் பேசுவது, யாரேனும் குறுக்கிட்டால் டக்கென விலகிச் செல்வது என 3.6 கி.மீ வேகத்தில் செயல்படுகிறது.

 வைஃபை இணைப்பை பயன்படுத்தி ஹோட்டலின் அறை எண், வழி என அனைத்தையும் திருத்தமாகச் செய்கிறது. டிமால் ஜெனி ஸ்பீக்கர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு ரெடி என்பதைக் கூறி சர்வீஸ் செய்து அசத்துகிறது. குரல் கட்டளைகள் அல்லது  டச் ஸ்கிரீன் மூலம் ரோபோவை இயக்கலாம். விரைவில் சோதனைக்கு ரெடியாகவுள்ள ரோபோவை மருத்துவமனைகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் சிப்பந்திகளாக விரைவில் எதிர் பார்க்கலாம்.