பிங்க் தொழிலதிபர்!



அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் சிண்டி எக்கெர்ட், தனது ஸ்ப்ரௌட், பிங்க் சீலிங் எனும் இருமருந்து நிறுவனங்களின் மூலம் கர்ப்ப சோதனை, தாய்ப்பால் பொருட்கள், பெண்களுக்கான வயாக்ரா(Flibanserin-Addyi) ஆகியவற்றை விற்று வருவதோடு அத்தகைய நிறுவனங்களில்
முதலீடும் செய்து வருகிறார்.  

அமெரிக்காவின் எஃப்டிஏ மூலம் இருமுறை தடைசெய்யப்பட்ட மருந்து ஃபிளைபான்செரின். பெண்களின் பாலியல் பிரச்னைக்கு தீர்வு தரும் என்று சிண்டி கூறிவருவது கடும் சர்ச்சையாகியுள்ளது. ஆண்களுக்கு வயாக்ரா பாலுறுப்பில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது என்றால் சிண்டியின் மாத்திரை மூளையில் ஜாலம் காட்டி செக்ஸ் மூடைத் தூண்டு மாம். மாத்திரை டூப்ளிகேட் என சர்ச்சைகள் கிளம்பினாலும் விற்பனை அமோகம்.  

ஏறத்தாழ  ரூ.7,07,65,000 க்கு  விற்பனையில் தூள் கிளப்பியுள்ளது. அதேசமயம் இதில் பக்க விளைவு குறித்த எச்சரிக்கையும் உண்டு. சிண்டி உலகநாடுகளுக்குச் சென்று செக்சில் திருப்தியாக இருக்கிறீர்களா என்று கேட்டு மாத்திரைகளை விற்பதோடு, ஆன்லைனில் பாலுறவு குறித்த கேள்வி-பதில்களுக்கு ஆலோ சனைகளை வழங்க மருத்துவர்களையும் தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருக்கிறார். காதலையும் காமத்தையும் மாத்திரை தந்துவிடுமா என்ன?