திருநங்கை ஆசிரியர்!



பிரேசிலின் கான்ஹோனாஸ் நகரில் லியோனா தனித்த பெண்மணி. வேலை செய்யும் பள்ளியில் பிற ஆசிரியர்கள் அவரை மிஸ் ஆல்பர்ட் என சங்கடமுடன் அழைக்கின்றனர். அனைத்து சர்ச்சுகளுடன் பள்ளிகள் இணைந்துள்ளதால் லியோனாவுக்கு வேலை கிடைப் பதில் சிரமம் இருந்தது. 50 ஆயிரம் பேர் வசிக்கும் நகரில் லியோனா மட்டுமே திருநங்கை.

 “திருநங்கை ஆசிரியர் தங்கள் குழந்தைகளை தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களாக மாற்றிவிடுவார்கள் என பெற்றோர் கவலைப்படுகின்றனர்” என்கிறார் ட்ரான்ஸ்பசண்டோ திட்ட பேராசிரியரான அன்னா பௌலா பிராகா லஸ்.   

பிரேசிலைச் சேர்ந்த IBTE அமைப்பு, கல்வித்துறையில் பணியாற்றும் திருநங்கைகளை ஒருங்கிணைக்கிறது. “இதுவரை நாடு முழுவதும் 90 திருநங்கை ஆசிரியர்களை அடையாளம் கண்டுள்ளோம்.

தங்கள் அடையாளங்களை ஒளித்து வாழ அவசியமில்லை என பிரசாரம் செய்து
வருகிறோம்” என்கிறார் ஐபிடிஇ அமைப்பின் துணைத்தலைவரான சயனோரா.  தற்போது கொலம்பியா,அர் ஜென்டினா நாடுகளில் திரு நங்கைகள் பள்ளிகளில் ஆசிரியர்களாக தன்னம்பிக்கையுடன் வலம்வரத் தொடங்கியுள்ளனர்.