mini முத்தாரம்



இப்போது அமெரிக்க எழுத்துலகில் பெண்களின் நிலை என்ன?

அமெரிக்கா மட்டுமல்ல, உலகெங்கும் பெண்களின் எழுத்து குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அவர்கள் யுனிவர்சலான கதைகளை எழுதுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இது எனக்கும் கூட நிகழ்ந்திருக்கிறது.

உங்களின் துறை கடந்த 25 ஆண்டுகளில் எப்படி மாறியிருக்கிறது?

மக்கள் புத்தகங்களைப் படிப்பதில்லை என்று எழுத்தாளர்களும் பதிப்பகத்தாரும் நம்ப வைக்கப் படுகின்றனர். அப்படி படிக்கப்படாத புத்தகங்கள் காணாமல் போய்விடுகின்றன. இதுதான் 25 வருடங்களில் நான் கண்டது.

நீங்கள் இதுவரைக்கும் படிக்காத மிகச் சிறந்த புத்தகம்?

மோபி டிக் எழுதுவதைத் தாண்டி வேறு என்ன செய்வீர்கள்?

சமைப்பேன். என்னுடைய அம்மாவும் பாட்டியும் சிறந்த சமையல் கலைஞர்கள். நல்ல உணவை சமைப்பது கூட ஒரு நல்ல கதையை எழுதுவது போலத் தான்.

-ஜேஸ்மின் வார்ட்,எழுத்தாளர்.