காமிக்ஸ் திருவிழா



அமெரிக்காவின் துப்பறியும் காமிக்ஸ் ‘பேட்மேனி’ன் 80-வது வருடம், பிரான்ஸின் நகைச்சுவை காமிக்ஸ் ‘ஆஸ்டெரிக்ஸி’ன் அறுபதாவது வருடம். சமீபத்தில் பிரான்ஸில் நடந்த 46-வது அங்குலீம் சர்வதேச காமிக்ஸ் புத்தகத் திருவிழா, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு காமிக்ஸ் புத்த கங்கள் விற்பனை என 2018-ம் ஆண்டை காமிக்ஸ் புத்தகங் களின் பொற்காலம் என்றே சொல்லலாம்.

முப்பது வருடங்களுக்கு  முன்பு பெல்ஜியத்தில் வருடத்துக்கு 700 காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே வெளிவந்தன.  இன்று வருடத் துக்கு 5000 காமிக்ஸ் புத்தகங்கள் வெளிவருவதோடு விற்பனை யிலும் சக்கைப்போடு போடு கின்றன. ‘‘எந்தவொரு  கலாச்சார, பண்பாட்டுத் துறையும் இந்த அளவுக்கு வளர்ச்சியடைந்த தில்லை...’’ என்று பெருமிதத் தோடு சொல்கிறார் காமிக்ஸ் புத்தகத் திருவிழாவின் இயக்குனர் ஸ்டீபன்.

ஒரு காலத்தில் பிரான்ஸில் காமிக்ஸ் எழுத்தாளர்களிடம், ‘‘உங்க திறமைக்கு நீங்க சினிமா வில்  அல்லது  இலக்கியத்தில் இருக்கணும்...’’ என்று சொன்ன வர்கள் இன்று அப்படி எதுவும் சொல்வதில்லையாம். அந்தள வுக்கு காமிக்ஸ் துறை பெரும் வளர்ச்சியை எட்டிவிட்டது. இத் தனைக்கும் ‘‘புதிதாக வெளி வருகிற காமிக்ஸ் கதைகள் சுவாரஸ்யமாகவோ, தரத்துடனோ இருப்பதில்லை...’’ என்கிறார்கள் விமர்சகர்கள்.