கரப்பான்பூச்சியின் காதலன்



ஜப்பான் தொழில்நுட்பம், உழைப்புக்கு மட்டும் பெயர் பெற்ற நாடு அல்ல. விநோதமான, வேடிக்கையான சம்பவங்கள் அரங்கேறும் ஒரு தேசமாகவும் இன்றைய ஜப்பான் மிளிர்கிறது.

டோக்கியோவில் பிறந்தவர் சினோஹரா. நன்றாகப் படித்து கை நிறைய சம்பளத்துடன் ஒரு வேலையில் இருக்கிறார். வசீகரமான தோற்றமுடைய சினோஹராவை நிறைய பெண்கள் காதலித்தாலும் அவருக்கு லிசாவின் மீதுதான் தீராத காதல். அவரைப் பொறுத்தவரை உலகி லேயே லிசா தான் கவர்ச்சியானவள்; அழகானவள்.

சினோஹரா-லிசாவின் காதல் செய்தி வெளியே தெரியவர உலகமே ஆச்சர்யத்தில் அதிர்ந்தது. காரணம், லிசா ஒரு கரப்பான் பூச்சி. ஒரு வருடத்தில் அந்த கரப்பான் பூச்சி இறந்துவிட்டது. சினோஹரா கரப் பான் பூச்சியைப் புதைக்காமல் அதை அப்படியே சாப்பிட்டு விட்டார்.

‘‘லிசா இறந்த துக்கத்தை என்னால் தாங்க முடியவில்லை. அவளை அப்படியே விழுங்கிவிட்டேன். இப்போது அவள் என்னுடைய ஒரு பகுதியாக மாறிவிட்டாள்...’’ என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் கண்ணீர் மல்க சொல்லியிருக்கிறார் சினோஹரா.