தூக்கமின்மைமேற்கத்திய நாடுகளில் மட்டுமல்லாமல் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் இளசுகளின் மத்தியில் பெரும் பிரச்சனையாக வெடித்திருப்பது தூக்கமின்மைதான். இதனால் அவர்கள் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையாக பாதிப்படைகின்றனர். தூக்கம் வராமல் அவதிப்படுகிற பல்வேறு நிலைகளை செல்ஃபி எடுத்து ஒரு கண்காட்சியாகவும் மாற்றிவிட்டார் இங்கிலாந்தைச் சேர்ந்த கலைஞர் டிரேசி எமின்.