கொண்டாட்டம்



பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு வணிக வளாகம். அங்கே லூனார் புது வருட கொண்டாட்டம் கோலகலமாக அரங்கேறியது. அரிய வகை ‘டீ கப்’ பன்றிக்குட்டிகளுடன் குழந்தைகள் விளையாடும் காட்சி பலரின் மனதைக் கவர்ந்தது. பிலிப்பைன்ஸ் மக்களின் நேசிப்புக்குரிய செல்லப்பிராணி ‘டீ கப்’ பன்றிக்குட்டிகள். அவர்களின் முக்கிய விழாக்களில் இந்த பன்றிக்குட்டிகளும் தவறாமல் இடம் பிடிக்கின்றன.