அதிசய முட்டை



உலகறிந்த ஒரு பிரபலம் கைலி ஜென்னர். சில மாதங்களுக்கு முன்பு தனது குழந்தையைப் பற்றி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைத் தட்டியிருந்தார். 19 மில்லியன் லைக்குகளை அள்ளி இன்ஸ்டாகிராமிலேயே அதிக லைக்குகளைப் பெற்ற ஒரு சாதனையைப் புரிந்ததோடு மட்டுமல்லாமல் கைலிக்குக் கோடிக்கணக்கில் வருமானத்தையும் ஈட்டித்தந்தது.

கைலியின் லைக் சாதனையை ஒரு  சாதாரண முட்டை அடித்து நொறுக்கிவிட்டது.  ‘‘நாம் அனைவரும் இணைந்து கைலியின் சாதனையை முறியடிப் போம்...’’ என்ற நோக்கில் கிறிஸ் என்பவர் ஒரு முட்டையின் புகைப் படத்தைப் பதிவு செய்திருந்தார். வெறும் ஒன்பதே நாட்களில் 52 மில்லியன் லைக்குகளை அள்ளி கைலியின் சாதனையை தவிடு பொடியாக்கிவிட்டது அந்த முட்டை. தவிர, யூஜின் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த முட்டையை 10 மில்லியன் ஃபாலோயர்கள் பின்தொடர்கிறார்கள்.

‘‘முட்டையில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை. இனமோ மதமோ அதனிடம் கிடையாது. முட்டை முட்டைதான். அது உலகளாவியது...’’ என்று தத்துவத்தைத் தெறிக்க விடுகி றார் கிறிஸ். இத்தனைக்கும் கிறிஸ் கிரியேட்டிவ் ஏஜென்சியில் பணிபுரிகிறார். கைலி அளவுக்கு அவர் பிரபலமில்லை.