அதிபர் தேர்தலில் காமெடி நடிகர்வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை சினிமாவிலும் சீரியல்களிலும் பார்த்திருப்போம். ஆனால், சில நேரங்களில் சினிமாவிலும் சீரியல்களிலும் நடக்கும் சம்பவங்கள் நிஜத்திலும் நடப்பதுண்டு. அப்படியான ஒரு சம்பவம் இது.உக்ரைனின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. இவர் உக்ரைனின் அதிபர் வேடத்தில் நடித்த  ‘Servant of the People’ என்ற தொலைக்காட்சித் தொடர் சக்கைப்போடு போட்டது.

மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. உக்ரைனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனை வரின் இதயத்திலும் நீங்காத ஒரு இடத்தைப் பிடித்துவிட்டார் ஜெலன்ஸ்கி. இந்தத் தொடர் 2015-இல் ஒளிபரப்பானது.

கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் ‘Servant of the People’ என்ற ஒரு கட்சியைத் தொடங்கினர். அந்தக் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட விளாடிமிர் 2019-ம் ஆண்டுக்கான உக்ரைனின் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். இத்தனைக்கும் அரசியலில் எந்தவித அனுபவமும் இல்லாதவர் விளாடிமிர்.