மூங்கில் வீடுஆசியாவிலேயே வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடு பிலிப்பைன்ஸ். 2030-ம் ஆண்டில் அங்கே 1.2 கோடிப் பேர் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பால் வீடுகளின் தேவையும் பிலிப்பைன்ஸில் அதிகரித்துள்ளது. நாட்டின் நிலையை சரியாகப் புரிந்துகொண்ட தொழில் அதிபர் ஒருவர், இப்போதே வீட்டைக் கட்டி விற்கத் தொடங்கிவிட்டார்.

இங்கேயும் கூடத் தான் நிறைய பேர் வீட்டைக் கட்டி விற்பனை செய்கிறார்கள் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அந்த தொழில் அதிபர் விற்பனை செய்வது மூங்கில் களால் ஆன நகரும் வீட்டை. காலையில் நீங்கள் ஆர்டர் செய்தால் மாலையில் வீடு தயாராகிவிடும்.

ஒரு மூங்கில் வீட்டைக் கட்டி முடிக்க அதிகபட்சமாக நான்கு மணி நேரம் ஆகிறதாம். அப்பா, அம்மா, குழந்தை என்று மூன்று பேர் அந்த வீட்டில் தாராளமாக வசிக்கலாம்.
வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்குத் தகுந்தபடி வீடுகளை வடிவமைத்தும் கொடுக்கிறார் அந்த தொழில் அதிபர்.