ரெய்வாஜப்பானிய பேரரசர் அகிஹிடோ முதுமை காரணமாக அரியணையைத் துறக்கப்போவதாக அறிவித்துள்ளார். ஏப்ரல் 30-ம் தேதி வரை அவர் பதவியில் இருப்பார். இதைத் தொடர்ந்து அவரின் மூத்த மகனான இளவரசர் நருஹிடோ புதிய பேரரசராக வரும் மே 1-ம் தேதி அன்று முடிசூட உள்ளார். இவரது புதிய சகாப்தம், ‘ரெய்வா’ என அழைக்கப்படும் என்று ஜப்பானிய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் வெளியாகியிருக்கும் செய்தித்தாளை வாங்க அலைமோதுகிறது மக்கள் கூட்டம்.