காகித பிரமிட்



பாரீஸில் கம்பீரமாக வீற்றிருக்கிறது லூவர் மியூசியம். அதன் முற்றத்தில் பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறது கண்ணாடியிலான லூவர் பிரமிட். இந்த பிரமிட்டை உருவாக்கி முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இதைக் கொண்டாடும் விதமாக ஜே.ஆர் என்ற கலைஞர் லூவர் பிரமிட் மாதிரியே காகிதத்தில் ஒரு ராட்சத பிரமிட்டை உருவாக்கி லூவர் மியூசியத்தின் முற்றத்தில் காட்சிக்காக வைத்திருந்தார்.

இந்த பிரமிட்டுக்காக 400 தன்னார்வலர்கள் ஜே.ஆருடன் சேர்ந்து உழைத்திருக்கிறார்கள். காட்சிக்கு வைக்கப்பட்ட முதல் நாளிலேயே  சுற்றுலாப் பயணிகளின் காலடி அதிர்வுகளின் காரணமாக அந்த காகித பிரமிட் கீழே விழுந்து உடைந்துவிட்டது. ‘‘இப்படி நடக்கும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ரொம்பவும் மோசமான அனுபவம்...’’ என்று சொல்லும்போதே ஜே.ஆரின் குரல் உடைகிறது.