விளக்குத் திருவிழா



ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வருகிற மே 24  முதல் ஜூன் 15 வரை ‘விவிட் சிட்னி’ என்கிற விளக்குத் திருவிழா கோலாகலமாக அரங்கேறவுள்ளது. ஓபேரா ஹவுஸ், துறைமுக பாலம் மற்றும் சிட்னியைச் சுற்றியிருக்கும் வணிக வளாகங்கள் எல்லாம் மூன்று வாரத்துக்கு அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கும்.

சமீபத்தில் இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மின் விளக்குச் சிற்பங்களை ஒளிர விட்டு சோதனை செய்துள்ளனர். தவிர, உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சி,  கலந்துரையாடல்கள் என ஊரே களைகட்டும். குறைந்தபட்சம் இத்திருவிழாவுக்கு 40 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.