டெக் புதுசு



ஒயர்லெஸ் இயர்போன்

மலிவான விலையில் தரமான ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகப்படுத்தியுள்ளது ‘ஸ்டஃப்கூல்’ நிறுவனம். ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டால் 7 மணி நேரம் இடைவிடாமல் இயங்கும். புளூடுத் வசதியும் உள்ளது. விலை ரூ.1,999.

பவர் ஹவுஸ்

ஒரே தடவையில் 40 போன்களை சார்ஜ் செய்யும் பவர் ஹவுஸை அறிமுகப்படுத்தியுள்ளது ‘ஏங்கர்’ நிறுவனம். லேப் டாப் உள்ளிட்ட மற்ற எலெக்ட்ரிக்கல் சாதனங்களையும் இதில் சார்ஜ் செய்துகொள்ள முடியும். சுற்றுலா செல்பவர்களுக்கு ரொம்பவே வசதியானது இந்த பவர் ஹவுஸ்.

ரோபோ வாட்ச்

இதோ வந்துவிட்டது ரோபோ வாட்ச். குழந்தைகளைக் கவரும் விதமாக இதை வடிவமைத்திருக்கின்றனர். காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்துவிட்டால் போதும். துல்லியமாக 5 மணிக்கு உங்களை எழுப்பிவிடுதோடு மட்டுமல்லாமல் வீட்டுச் சுவரில் 5 மணியை புரொஜெக்ட் செய்து ஆச்சர்யப்படுத்துகிறது இந்த ரோபோ வாட்ச்.